Skip to content

திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில்நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இதில், அலுவலக வாயில் என்பதை ஹிந்தி வார்த்தையில் कर्तव्य द्वार குறிப்பிடுகின்றனர். இதனை, கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர்.
அலுவலக நுழைவாயில் என்பதை தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ்

எழுத்துக்களை கொண்டு ஹிந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ள ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர், காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் தடையை மீறி பேரணியாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் கல்வெட்டில் இருந்த ஹிந்தி எழுத்தை மைகொண்டு அளித்து ஒன்றிய அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ் மாமன்ற உறுப்பினர் காஜா மலை விஜி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

error: Content is protected !!