Skip to content

வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (25). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.

இந்நிலையில், மஹதி ஹசன் ஷேக் தனது மகன் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்பில் புகைப்படமாக வைத்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து அப்தாப் ஷேக் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மஹதி ஹசன் ஷேக்கிற்கும், அப்தாப் ஷேக்கிற்கும் இடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மஹதி ஹசன் ஷேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்தாப்பை சரமாரியாக குத்தியுள்ளார். அப்தாப்பின் மனைவி கண்முன்னே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மஹதி ஹசன் ஷேக் கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அப்தாப் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று அப்தாப் ஷேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்தாப் ஷேக்கை கத்தியால் குத்திக்கொன்ற மஹதி ஹசனை கைது செய்தனர். விசாரணையில் மஹதி ஹசன் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மஹதி ஹசன் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!