Skip to content

வீடு தீப்பிடித்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி உறையூர் கீழ புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி வயது (45. ) இவர் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவரது மகன் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் , பேங்க் பாஸ்புக் , டிசி போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!