திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் விரக்தி அடைந்த மாரிமுத்து வீட்டிற்குள் அறையை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார்.காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படவில்லை.சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது மாரிமுத்து மனைவியின் சேலையால் வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து அவரது மனைவி ருத்ரா அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

