பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தராததால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் மாமாவை சுத்தியலால் அடித்து டீசல் ஊற்றி தீ வைத்து கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம், காசிபேட் மண்டலம், கடிபிகொண்டா கிராமத்தில் உள்ள ராஜீவ் க்ருஹ கல்பன ( அரசு வழங்கிய அடுக்குமாடு குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் ராஜசேகர் (51) 5வது பிளாக், 24வது பிளாட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீலதா சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அவர்களுக்கு ராஜஸ்ரீ, தேஜஸ்வி மற்றும் மனோஜ்னா என்று மூன்று மகள்கள் உள்ளனர். ராஜசேகர் ஆட்டோ ஓட்டுநராகவும் சமையல்காரராகவும் பணிபுரிந்து, தன் பிள்ளைகளின் வளர்த்து குடும்பம் நடத்தி வந்தார். 2023-ல், தனது மூத்த மகள் ராஜஸ்ரீயை, வாரங்கல் மாவட்டம், கீசுகொண்டா மண்டலம், ஷயாம்பேட்

ஹவேலியைச் சேர்ந்த பொக்குலா பிரவீனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவரது இரண்டாவது மகள் தேஜஸ்வினி ஹனுமகொண்டாவில் வசிக்கிறார், மற்றொரு மகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணத்தின் போது, அவர் ராஜஸ்ரீக்கு 3 லட்சம் ரூபாய் வரதட்சணையாகவும், வீட்டு உபயோகப் பொருட்களையும் ராஜசேகர் கொடுத்தார். ராஜஸ்ரீ – பிரவீனுக்கும் 2024-ல் மகன் ஜெயான்ஷ் பிறந்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரவீன், தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள மௌலாலியில் உள்ள கோகோ-கோலா நிறுவனத்தில் பணிபுரிந்து வசித்து வந்தார். பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, கடந்த 6 மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜஸ்ரீயைத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ராஜஸ்ரீ கடந்த பிப்ரவரி மாதத்தில் தவறி விழுந்து வலது கையை உடைத்துக் கொண்டார். இதனால், வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஒரு மாதத்திற்கு முன் தந்தையிடம் குழந்தைக்குப் அன்னாபிரசனம் பூஜை செய்ய தந்தை வீட்டிற்கு வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு வந்த பிரவீனும் இங்குதான் தங்கியிருக்கிறான். இந்தநிலையில் செவ்வாய்கிழமை இரவு மீண்டும் வரதட்சணை கேட்டு சண்டையிட்டுள்ளார். புதன்கிழமை அதிகாலையில், பிரவீன் வீட்டில் இருந்த சுத்தியலால் தன் மாமா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ராஜஸ்ரீயின் தலையில் தாக்கினான். அவர்கள் இருவரின் தலைகளும் பிளந்து, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என பிரவீன், அவர்கள் இருவர் மீதும் டீசலை ஊற்றித் தீ வைத்தான். பின்னர் பிரவீன் மனைவி ராஜஸ்ரீயின் அத்தைக்கு போன் செய்து தன் மனைவியும் மாமாவும் தீயில் எரிந்து விட்டதாக தெரிவித்தான். உடனடியாக ராஜசேகரின் இரண்டாவது மகள் தேஜஸ்வியை அழைத்துத் தகவல் தெரிவித்ததால் அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது ராஜசேகரும் ராஜஸ்ரீயும் ஏற்கனவே முழுவதுமாகத் தீக்காயமடைந்து அடையாளம் தெரியாத நிலையில் இருந்தனர். அவர்களின் நெற்றியில் கடுமையான காயங்கள் இருந்தன. தேஜஸ்வியின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மடிகொண்டா ஆய்வாளர் புல்யால கிஷன் தெரிவித்தார். பிரவீன் தனது மகன், மற்றும் மகளுடன் வெளியே செல்வதை பார்த்த பொது மக்கள் பிடித்து என்ன நடந்தது என கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், பிரவீன் பிப்ரவரி மாதத்திலேயே அவர்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக டீசல் வாங்கி வீட்டின் ஒரு மூலையில் வைத்திருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

