Skip to content

நானே படம் தயாரித்து நடிக்கிறேன்… நடிகை ஆண்ட்ரியா

  • by Authour

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இவரை பற்றி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது வைரலாகியுள்ளது .இது பற்றி நாம் காணலாம்  இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்வில் பேசியதாவது :திடீரென்று ஆண்ட்ரியா ஒரு ஸ்கிரிப்ட்டை மெயிலில் அனுப்பினார். ‘இதை படித்துவிட்டு, எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். ஏனென்றால், இப்படத்தின் தயாரிப்பாளராக மாற முடிவு செய்துள்ளேன்’ என்றார். உடனே படித்தேன். அற்புதமாக இருந்தது. சொக்கலிங்கம், ஆண்ட்ரியா இணைந்து தயாரித்தனர். இந்த படத்துக்கு நெல்சன் திலீப்குமார் ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்துள்ளார். இந்த கதையில் அவரது பங்கு நிறைய இருக்கிறது. இந்த படத்தின் மூலமாக ஆண்ட்ரியா தயாரிப்பாளராவதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு எதற்கு இந்த வேலை? நீங்கள் புரொடியூசராகி என்ன செய்ய போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். இந்த கதையை ஏன் தேர்வு செய்தீர்கள்? உங்கள் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கிறதே என்றும் சொன்னேன். உடனே ஆண்ட்ரியா, ‘இது நெகட்டிவ் கேரக்டர்தான்’ என்று ஃபோல்டாக சொன்னார். அதற்கு நான், ‘இதில் வில்லியாக நடித்தால், பிறகு எல்லா படத்திலும் இப்படித்தானே கேட்பார்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘இப்போது எதற்குமே என்னை அழைப்பது இல்லை. எனவே, நானே படம் தயாரித்து நடிக்கிறேன். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று சொன்னார். அவரது நம்பிக்கை பலிக்கட்டும்’ என்றார்.

error: Content is protected !!