தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்கள்தான் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். கமல் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தவர். ஆனால் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், ஹீரோவாகவேண்டும் என்றெல்லாம் இல்லை என்ற எண்ணத்துடன் இருந்த ரஜினியை ஹீரோ வாய்ப்பு தேடிவந்தது. எப்படியோ ஒருவழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகன் வெற்றிடத்தை நிரப்ப கமலும் ரஜினியும் கிடைத்துவிட்டனர்.
பொதுவாகவே நடிகர்கள் என்று சொன்னாலே யாருக்கு மக்கள் மத்தியில் அந்தஸ்து அதிகம்? என்ற போட்டி இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த இரு நட்சத்திரங்களிடையேயான உறவு அப்படி இருக்கவில்லை. கமலா? ரஜினியா? என்பதை விட கமலும் -ரஜினியும் என்பதைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பினர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்விதமாக மொத்தம் 13 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அவற்றில் 6 படங்கள் ப்ளாக் பஸ்டர்களாக அமைந்தன. பின்னர் இவர்கள்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட இருவரும் இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதன்பின் இருவருமே தங்களுக்கே உரித்தான பாணியில் வளர்ந்து இன்று இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் என புகழின் உச்சத்தில் இருக்கின்றனர்.கமல் நடிப்பதாக இருந்து பின்னர் ரஜினிக்கும்; ரஜினி நடிப்பதாக இருந்து கமலுக்கும் கைமாறிய படங்கள் கூட உண்டு. இந்தியன் படத்தில் முன்பு ரஜினியும், எந்திரன் படத்தில் முன்பு கமலும் நடிப்பதாக இருந்தன.
இந்நிலையில் கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசணும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னரும், கமல் ரஜினி இருவரும் இணைந்து நடிப்பதாக பலமுறை தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இருவரின் சம்பளமே அதிகம் என்பதால், சம்பளம் தாண்டி படத்தின் தரத்தில் கவனம் செலுத்தமுடியாது என கமல் மறுத்துவிட்டார்.ஆனால், இப்போது அதற்கான காலம் கைகூடிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை தான் ; ஆனால் இன்னும் படத்தின் கதை, இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த படம் நிச்சியமாக வரும் என கூறினார். மேலும் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் இணைத்து உருவாகும் பட தயாரிப்பில் நடிக்க போவதாகவும் இன்னும் டைரக்டர் முடிவு ஆகவில்லை என்றும் கூறினார். இன்று அண்ணா மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறினார்