தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து தரைவழி மார்க்கமாக கரூர் வந்தடைந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பிரேம் மஹால் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, பேரூர்,கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்பொழுது இளைஞர் அணி திமுகவின் முதுகெலும்பு எனவும் தேர்தலில் முக்கிய பங்காற்றுவது இளைஞர் அணி நிர்வாகிகளாக இருக்க வேண்டும் எனவும் பேசினார்.
மேலும் அவர் பேசிய போது முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு பேசுகையில் இவர் போல் மாவட்ட செயலாளர்கள் அமைந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார்.
அப்பொழுது விழா அரங்கம் முழுவதும் கர எழுப்பப்பட்டு தங்களது மகிழ்ச்சியை திமுக இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.