நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற சம்பவங்கள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர் வன்முறை கட்டுக்குள் வந்தது. அன்புமணி கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளார். அந்த மண்டபத்தில் பாமக தொண்டர்களும் குவிந்து உள்ளனர்.
அதே நேரத்தில் நகரின் மற்ற பகுதிகளில் குவிந்திருந்த பாமகவினர் அனைவரும் நகரை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். வன்முறை நடந்த பகுதிகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்வீச்சில் காயமடைந்த போலீசாரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் அன்புமணியை சிறைக்கு அனுப்புவதா அல்லது விட்டுவிடுவதா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். நெய்வேலியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் டிஜிபி சங்கர் ஜிவாலும் நெய்வேலி விரைந்துள்ளார். நெய்வேலி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. கடலூரில் இருந்து திருச்சி வரும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுளன.