திமுகவில் இருந்து வெளியேறிய பாரிவேந்தரின் சோக கதை இது தான்…

900
Spread the love

திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி கடந்த எம்பி தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியனில் பாரிவேந்தர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது… இந்த நிலையில் ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவம் வரும் சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடப்போவதாக பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து அறிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதற்கு காரணம் திமுக கூட்டணியில் 1 தொகுதி மட்டுமே வழங்க முடியும் என கூறப்பட்டதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.. ஒரு இடம் என்பதோடு அதுவும் உதயசூரியனில் போட்டியிட வேண்டும் எனவும் கூறப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பாரிவேந்தர் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது… 

LEAVE A REPLY