Skip to content

இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் சுரேந்திரன் (வயது 35)புகழேந்திரன் (வயது 28). கடந்த 1 ந்தேதி புகழேந்திரன் சுரேந்திரனின் மைத்துனருடன் சண்டையிட்டு உள்ளார்.
இதையடுத்து சுரேந்திரன் புகழேந்திரனை சந்தித்து அவரிடம் நடந்த விவரத்தை கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு புகழேந்திரன் மது பாட்டிலை எடுத்து சுரேந்திரனை தாக்கிவிட்டார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சுரேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுரேந்திரன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டிலால் தாக்கிய புகழேந்திரனை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கஜேந்திரனை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!