Skip to content

இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம்
விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு, அருகில் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்த விமானிகளை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவர்கள் நுவரெலியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை நிலையானதாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் நோக்கில் நுவரெலியாவிற்கு வந்திருந்த போது இந்த நீர் விமானம் விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிரெகரி ஏரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில், மீட்பு நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!