Skip to content

கரூர் வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் திறப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடியின் புதிய கட்டிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள, கரூர் to கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை (NH 81) வைரமடையில் திருச்சி மத்திய மண்டல முடிவு எல்லையில் காவல் சோதனை சாவடி செயல்பட்டு வந்தது. இச்சாலையானது நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு அந்த இடத்தில் புதிதாக காவல் சோதனை சாவடி கட்டிடம்

கட்டப்பட்டது.

இக்கட்டிடத்தை இன்று கரூர் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் முன்னிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., திறந்துவைத்தார் .

இந்நிகழ்வில் வோயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ், கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மேனகா, தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்திய பிரியா மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் கண்காணித்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!