தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது.
இரவு நேரத்தில் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, தெருநாய்கள் குரைத்துக்கொண்டே துரத்துகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்தில்

சிக்குகின்றனர். அதேபோல, சாலைகளில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர்களை தெரு நாய்கள் அடிக்கடி கடிக்க துரத்துவதாகவும். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த கரூர் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ஜவகர் பஜார், சின்ன ஆண்டான்கோவில் சாலை, செங்குந்தபுரம், தான்தோன்றி மலை உள்ளிட்ட பல்வேறு தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு.

