இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாதோல்வி
- by Authour

Tags:IND VS ENG Cricket Seriesஇங்கிலாந்து கிரிக்கெட் பயணம்இந்தியாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயணம்