Skip to content

77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

இந்தியாவி்ன் 77வது சுதந்திர தின விழா நாளை  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை காலை தேசிய கொடியேற்றிவைத்து முப்படைகள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றுகிறார்கள்.  புதுக்கோட்டையில்  மாவட்ட சேமப்படை மைதானத்தில் காலை 9.05 மணிக்கு  நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர்  மு. அருணா தேசியக்கொடி ஏற்றிவைத்து  அரசின் நலத்திட்ட

உதவிகளை வழங்கி, தியாகிகளை கவுரவிக்கிறார்.  பின்னர் போலீசார் அணிவகுப்பையும் பார்வையிடுகிறார்கள்.விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

விழாவில் எஸ்பி. வந்திதா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை  மாவட்ட வருவாய் அதிகாரி ஆர். ரம்யாதேவி செய்துள்ளார். இதுபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!