Skip to content

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் மயில்சாமி அண்ணாதுரை?

துணை ஜனாதிபதி தேர்தல்  வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய  21ம் தேதி கடைசி நாள். பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா
கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

அரசியல்வாதிகள்   அல்லாத சமூக ஆர்வலர்கள்,  விஞ்ஞானிகள், உள்ளிட்ட பிரபலங்களை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்ற கருத்து எட்டப்பட்டது. அதன் அடிப்படையில்இன்று மதியம் 12 மணி அளவில் மீண்டும் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்  நடக்கிறது. இதில் வேட்பாளர் தேர்வு  செய்யப்படுவார் என தெரிகிறது.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,  காந்தியின் கொள்ளுபேரன் துஷார் காந்தி,  ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.  நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று வேட்பாளர் தேர்வு  செய்யப்படுவார் என தெரிகிறது.

 

 

 

error: Content is protected !!