Skip to content

இந்தியா – பாக். கிரிக்கெட் மோதல்: இலங்கை விமான டிக்கெட் உயர்வு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி.20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்.15ல் கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா-பாக். போட்டியால் ரூ.1.45 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி காரணமாக விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிப்.15ம் தேதி காலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கட்டணம் ரூ.1.45 லட்சமாக உள்ளது.

பிப்.15ம் தேதி அதிகாலை 3.25 மணிக்கு டெல்லியில் இருந்து கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.1.09 லட்சமாக அதிகரித்துள்ளது.

பிப்.15ம் தேதி நண்பகல் 12.20 மணிக்கு டெல்லியில் இருந்து கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.90,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்.15ம் தேதி சென்னை – இலங்கை செல்லும் விமான டிக்கெட் கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சுமார் ரூ.9,000 வரை உள்ள சென்னை – இலங்கை விமான டிக்கெட் கட்டணம் ரூ.43,000 வரை அதிகரித்துள்ளது.

பிப்.15ம் தேதி மாலை 3.55 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கட்டணம் ரூ.41,000-ஆக உள்ளது.

பிப்.15ம் தேதி காலை 7.15 மற்றும் 6.15 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஏர் இந்தியா விமான கட்டணம் ரூ.31,000 ஆக உள்ளது.

error: Content is protected !!