Skip to content

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது;  துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை  பயன்படுத்தி  இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவுடு பொடியாக்கியுள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது என கூறினார்.
error: Content is protected !!