இலங்கையை எதிரான கிரிக்கெட்.. இந்தியா அசத்தல் வெற்றி ..

113
Spread the love

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (32),மினோத் பானுகா (27) நல்ல துவக்கம் தந்தனர். பானுகா ராஜபக்சா (24), சரித் அசலங்கா (38), கேப்டன் தசுன் ஷனகா (39) ஓரளவு கைகொடுத்தனர். தனஞ்செயா டி சில்வா (14), வனிந்து ஹசரங்கா (8) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் சமிகா கருணாரத்னே (43*) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்க 262 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், தீபக் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா (43) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய அறிமுகம வீரர் இஷான் கிஷான் (59) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் ஷிகர் தவான் தன்பங்கிற்கு அரைசதமடித்தார். மணிஷ் பாண்டே (26) ஒத்துழைப்பு தந்தார். மற்றொரு அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தந்தார். இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (86), சூர்யகுமார் யாதவ் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது.

LEAVE A REPLY