Skip to content

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்கா நாட்டின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அந்த பெட்ரோல் நிலையத்திற்கு கொள்ளையடிக்க கும்பல் ஒன்று வந்துள்ளது.

கொள்ளையடிக்க வந்த கும்பலை சாயிஷ் வீரா தடுக்க முயன்றபோது, அந்த கும்பல் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் இந்திய மாணவர் சாயிஷ் வீரா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் உயிரிழந்த சாயிஷ் வீரா 2 வாரங்களில் நாடு திரும்ப இருந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!