Skip to content

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை: விதிகளை மீறினால் நாடு கடத்தல் உறுதி

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் நிர்வாகம் மாணவர் விசா நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் சட்டங்களை மீறும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளூர் சட்டங்களை மாணவர்கள் மீறினால், அது அவர்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கும், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய முடியாதபடி நீண்ட கால தகுதி இழப்புக்கும் இது காரணமாகும். மாணவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டால் அல்லது விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களின் கல்விப் பயணம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க விசா என்பது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சலுகையே தவிர, அது ஒரு உரிமை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, அங்கு செல்லும் மாணவர்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், விதிகளைப் பின்பற்றித் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!