Skip to content

புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய அரசு மன்னர் கல்லூரில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் தனித்தனியாக சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு பெங்கல் விழா நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வலியுறுத்தி கல்லூரி முன்பாக திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மு.வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலளர் ஆர்.வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் காவியன், சஞ்சைபாரதி உள்ளிட்டோர் கண்டன உiராயற்றினர்.

error: Content is protected !!