தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், அதன் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த 1046 விவசாயிகள் 220 மெட்ரிக் டன் பருத்தி எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலம், கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டத்தை சார்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று பருத்திக்கு அதிகப் பட்சம் ரூ 7899, குறைந்தப் பட்சம் ரூ 7099, சராசரி ரூ 7469 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ 1.62 கோடி ஆகும்.
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…
- by Authour
