எய்ட்ஸ் நோய் முதன்முதலில் 1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள் உள்ளிட்ட உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போதும் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் தொற்றியவர்களை பரிதாபத்தோடும், மோசமாகவும் பார்த்தனர். இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் காய்ச்சல், வயிற்று போக்கு, இருமல் ஏற்பட்டு உடல் மெலிந்து மரணத்தை தழுவ நேரிடும் என பயந்தனர்.
எனவே இந்த நோய் 1983ல் இருந்து உலகத்தை மிரட்டிக்கொண்டு இருந்தது. பின்னர் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நோய் கிருமி தொற்றிக்கொண்டாலும் நீண்ட நாள் வாழ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் ஹெச். ஐ.வியை நிரந்தரமாக தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதலும் அளித்து விட்டது. அதன்படி வருடத்திற்கு இரு முறை இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டால் ஹெச்.ஐ.வி. பரவாது. இந்த மருந்தின் விலை இந்திய ரூபாய் மதிப்புல் ரூ.2, 100.