பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை .. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

460
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர், குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வந்தார். பெயிண்டர் தொழில் செய்து வந்த சீனிவாசன் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த 29 ல் ராஜேந்திரன் புழல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸ் ஸ்டேசன் வர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த சீனிவாசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனிவாசன் அளித்த வாக்குமூலத்தில் தனது மனைவி எதிரில் இன்ஸ்பெக்டர் பென்சாம் தாக்கியதாக கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் பென்சாமை, சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY