வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெருமைப்படுத்தும் வகையில் ரீல்ஸ்கள் வெளியாகின்ற்னா. கத்தியை வைத்தும், சாதி ரீதியாகவும் ரீல்ஸ் பதிவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லையில் ஆணவக்கொலை சம்பவத்தில் சுர்ஜித்துக்கு ஆதரவாக ரீல்ஸ் பதிவிடுவது அதிர்ச்சியளிக்கிறது. இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடுகள் இல்லாததால் வன்முறையை தூண்டும் ரீல்ஸ்கள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால் குற்றங்களை தூண்டும் விதமான ரீல்ஸ்களை தடுக்க, கட்டுப்பாடுகள் கோரி விரைவில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் கடிதம் அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்
- by Authour
