பெங்களூருவைச் சேர்ந்த ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதலியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரில், தனது கணவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருப்பதை அறிந்த மனைவி, போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ஜேக்கப்பைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

