சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரம் விழிப்புணர்வு முகாம், ஆகியவற்றை
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்தப் பேரணி கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து நீதிமன்றம் வழியாக அரசு கலைக் கல்லூரி முடிவடைந்தது. இந்த பேரணியில், சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து, சைகை செய்தவாரும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சைகை மொழி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த முகாமில், இந்திய சைகை மொழிகளை எவ்வாறு பயன்படுத்துவது, சைகை மொழி பழகுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.