பெங்களுருவை வீழ்த்தியது சென்னை…..

165
Spread the love

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்தெடுத்தது. இறுதி ஓவரில் டோனியும்-ஜடேஜாவும் களத்தில் நின்றனர். இறுதி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். சதிராட்டம் ஆடிய ஜடேஜா இறுதி ஓவரில் 36 ரன்களை விளாசி தள்ளினார். அவர் 5 சிக்சர், ஒரு பவுண்டரி, இரண்டு ரன்களையும் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 191 ரன்களை எடுத்திருந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்தது. இறுதியில் 69 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

LEAVE A REPLY