Skip to content

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

இந்தியா, பாகிஸ்தான்  இடையே ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக  நேற்று  முதல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 74 போட்டிகள் நடத்த வேண்டிய நிலையில் நேற்று 58வது போட்டி நடத்தப்பட்டது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட  வேண்டும். இன்று முதல் போட்டிகளில் கிடையாது என்ற நிலையில்,  ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் போட்டிகள் நடைபெறும். எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக  பிசிசிஐ துணைத்தலைவர்  ராஜீவ் சுக்லா அறிவித்து உள்ளார். புதிய அட்டவணைப்படி போட்டிகள் அனைத்தும் தென் மாநிலங்களில் மட்டுமே நடக்கும் என தெரிகிறது.இதனால் சென்னை பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என  கூறப்படுகிறது.  நிலைமை முற்றிலும்  சீராகிவிட்டால் மும்பை,  குஜராத் கொல்கத்தா போன்ற இடங்களில் நடத்த வாய்ப்பு  உள்ளது.

error: Content is protected !!