திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார். இதனால் திருச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் திருச்சி வந்துள்ளனர். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”எல்லோரும் வருகிறார்கள்” என மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார். அதேபோல், மத்திய அமைச்சரும் தமிழகத்திற்கான பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடமும் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பியூஷ் கோயல், ” தேஜ கூட்டணியின் தமிழகத்தின் தலைமை தான். கூட்டணி பற்றி இபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும்” என பதில் அளித்தார்.

