ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார்.
கைலாய யாத்திரையை முடித்து டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சத்குருவை தமிழகம் முழுவதும் இருந்து ஈஷா யோகா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்தும்,மலர்கள் தூவியும்,ஆன்மீக பாடல்கள் பாடியும் உற்சாகமாக விமான நிலையத்தில் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து விமான
நிலையத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். அதேபோல பேரூர்,மாதம்பட்டி, ஆலந்துறை,இருட்டுப்பள்ளம்,செம்மேடு,ஈஷா யோகா நுழைவாயில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஷா யோகா நிறுவனர் சத்குரு:-
கடந்த ஆண்டு இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு இருசக்கரம் ஓட்டக்கூடாது என மருத்துவர்கள் கூறி இருந்தனர் ஆனால் யோகா என்ற சக்தி மூலமாக இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறினார்.யோகா என்பது மிகப்பெரிய சக்தி மருத்துவத்தில் இல்லாதது கூட யோகாவில் உள்ளது
யோகா என்பது ஒரு தொடர்பு,ஒரு புத்துணர்ச்சி,ஒரு சக்தி ஒரு பலம் என கூறினார் மருத்துவர்கள் முடியவே முடியாது என்று கூறினார்கள் ஆனால் தற்பொழுது நலமாக இருப்பதாக தெரிவித்தார்.எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் சென்று வந்ததாகவும் மருத்துவர் மருத்துவ ரீதியாக இதுபோல பண்ணக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள்.
அமெரிக்கா வரிவிதிப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த சத்குரு:-
இதனால் பாதிப்பு கட்டாயமாக உள்ளது இதிலிருந்து தப்ப முடியாது அதே நேரத்தில் நமது நாட்டிற்கு மதிப்பு, மரியாதை இல்லாமல் நாம் நடந்து கொள்ள முடியாது பாதிப்பு இருந்தாலும் சரி நாடு முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இது ஒரு சவாலாக வந்தபோது மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் இது ஒரு உறுதியான நாடு என்று தெரிவித்தார்
நடிகர்கள் அரசியல் வருவது குறித்து கேள்விக்கு:-
எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார்கள்.அதேபோல் மக்களின் விருப்பம் மக்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று பார்ப்போம் எனவும் மக்கள் எதை விரும்புகிறார்களோ அது நடக்கட்டும் என கூறினார்.
ஈஷா கிராமோத்சவம் திருவிழா குறித்த கேள்விக்கு:-
2026 மற்றும் 2027-ம் ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தற்பொழுது 20 மாநிலங்களில் ஈஷா கிராமோத்சவம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குறித்த கேள்விக்கு:-
விநாயகர் வயிற விட தலை பெரிதாக இருப்பதாகவும் இந்த தலையில் அந்த அளவிற்கு இருப்பதாக கூறினார்.
ரொம்ப அதிசயமான,புத்தி தெளிவான நிலை,புத்தி கூர்மையாக இருந்து சமநிலையாக இருந்தால் எந்த தடை என்றாலும் தாண்டி போக முடியும் அதனால்தான் விநாயகர் சதுர்த்தி புத்தி கூர்மையாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறினார்.
யார் மீது அன்புள்ளதோ அவர்கள் நன்றாக இருப்பார்கள் என கூறினார்.