மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார். உடல்நலக்குறைவால் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
