Skip to content

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அற்றிக்கொள்ள காலக்கெடு முடிவடைந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் ராஜா தாசில்தார் சம்பத் ஆகியோர் தலைமையில் கடைவீதியில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்சார ஊழியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், சாலை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமப்புகளை கடை உரிமையாளர்கள் அப்புறப்படுத்தி கொண்டனர். அப்புறப் படுத்தப்படாத கடைகளில் முகப்பு பகுதியில் இருந்த பொருட்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி எடுத்துச் சென்றனர்.
error: Content is protected !!