Skip to content

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 மூன்று பவுன் தங்கச் செயின் , ரூ. 11 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கம்பெனி ஊழியரின் டூவீலர் திருட்டு

திருச்சி லால்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (26). இவர் திருச்சி அண்ணா சிலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானது. இது குறித்த அவர் கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஓடும் பஸ்ஸில் பயணியிடம் பணம் பறிப்பு

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் ( 60 ). இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில்வே ஜங்ஷன் நோக்கி சென்ற பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணத்தை மர்ம நபர் திருட முயன்றார். அப்போதே அவரை பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து போலீசரில் ஒப்படைத்தார்.விசாரணையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பட்டர் வொர்க் ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல்( 30) என்பவரை கைது செய்தனர்.பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

error: Content is protected !!