Skip to content

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனி படை அமைத்து இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில்  இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த திருட்டுசம்பவம் தொடர்பாக கடலூர் பகுதியை சேர்ந்த செந்தில் முருகன் மற்றும் சென்னையை சேர்ந்த சதிஷ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.   இவர்களிடமிருந்து  கிட்டத்தட்ட 140 சவரன் தங்க நகை, 40,000 பணம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் 140 சவரன் நகை திருட பட்ட சம்பவம் தொடர்பாக கடலூரில் வந்து போலீசார் கைது செய்தார்கள். இந்த கைதான குற்றவாளிகளின் cctv காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!