ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..
திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது வீட்டிலிருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து வேலைக்கார பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குமார் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசோழன் வழக்குப்பதிந்து வேலைக்கார பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
வணிக வளாகத்தில் 2 கடைகளில் கொள்ளை
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கிழக்கு விஸ்தரிப்பு சண்முகா நகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். (வயது 65). இவர் உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆவண காப்பக மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ 75 ஆயிரம் படம் திருடு போயிருந்ததுதெரியவந்தது. இதே போல் அருகில் இருந்த ஸ்டூடியோவிலும் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்ற பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஓட்டல் அருகே சடலமாக கிடந்த வாலிபர்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பிரபலமான ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டல் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் ? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து ஓட்டல் ஊழியர் ராஜாராம் என்பவர் கோட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து,கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி பாலக்கரை கூனி பஜார் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (44)இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தனபால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது
மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி … வாலிபர் மீது வழக்கு
திருச்சி வேங்கூர் பி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 40).இவருக்கு திருச்சி சிறுகாம்பூர் பகுதி சேர்ந்த சக்திவேல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு அரசு வேலை ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.4,47,000 பணத்தை கேட்டார். இதனை நம்பிய கண்ணன் பணத்தை வங்கி மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி செலுத்தி உள்ளார். பின்னர் தொகையை பெற்றுக் கொண்ட சக்திவேல் எந்த வேலையும் ஏற்பாடு செய்யாமல் பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார்.இதனையடுத்து கண்ணன் இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.