பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..
திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்றார். பின்னர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கிய போது அவருக்கு தன் கை பை திருட்டு போனது தெரியவந்தது. அதில் ரூ.30,000 பணம் ஒன்றரை பவுன் மதிப்புள்ள தங்க தோடுகள் அரை கிராம் மதிப்புள்ள ஒரு மோதிரம் அரை கிராம் மதிப்புள்ள 2 தங்க காசுகள் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. மேலும் அதில் ஏடிஎம் கார்டு மற்றும் சங்க உறுப்பினர் அட்டை ஆகியவையும் இருந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை
திருச்சி ஜெயில் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 48 இவரது 15 வயது மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யாவின் தந்தையிடம் தாய் திவ்யா பீரோவில் இருந்து பணம் எடுத்தாரா என கேட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை சிகிச்சை அளித்து செல்லும்படி அறிவுறுத்தினர் அங்கு சிகிச்சை பெற்று வந்த திவ்யா உயிரிழந்தார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலிப்பு வந்து மயங்கி விழுந்தவர் சாவு
திருச்சி உயகொண்டான் திருமலை கணபதி நகரை சேர்ந்தவர் பெருமாள் வயது 40 இவர் சண்முகா நகர் ரேஷன் கடைக்கு நடந்து சென்றார் அப்போது வலிப்பு வந்து மயங்கி அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது.
திருச்சி – திண்டுக்கல் சாலை கோரையாறு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக செசன்ஸ் நீதிமன்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக அங்கு போலீசார் சோதனை நடத்தி கஞ்சா விற்ற திருச்சி எம். கூடலூர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்கான் 26 என்ற வாலிபரை கைது செய்தனர் இதேபோல ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்ற கே. கள்ளிக்குடி ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கிரன்குமார் 24 என்ற வாலிபரை எ. புதூர் போலீசார் பிடித்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெரு அருகே கஞ்சா விற்ற சரித்திர பதிவேடு ரவுடியான ராம்ப்ரசாத் 23 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு அவருடன் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு 20 மற்றும் சேவாக் 20 ஆகிய இரண்டு வாலிபர்களை தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைது
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி புகையிலை விற்ற வர்களை கைது செய்தனர். திருச்சி கன்டோன்மென்ட் அருகே புகையிலை விற்ற ஒத்தக்கடை புது தெருவை சேர்ந்த ரவீந்திரன் 63 என்ற முதியவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 560 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதேபோல் கருமண்டபம் ஜே ஆர் எஸ் நகர் அருகே புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பூபதி 26 என்ற வாலிபரை செசன்ஸ் நீதிமன்ற போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது அரியமங்கலம் நேருஜி நகர் அருகே புகையிலை விற்ற அரியமங்கலம் அம்மா குளம் பாரதி தெருவை சேர்ந்த முருகேஷ் பாண்டியன் 66 என்ற முதியவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு அருகே புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமுத்துராஜ் 25 என்ற வாலிபரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 120 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோளி ட்ரங்க் சாலை அருகே புகையிலை விற்ற திருவானைக்கோவில் சக்தி நகரை சேர்ந்த கணேசன் 67 என்ற முதியவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 160 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதே போல் உறையூர் சாலை ரோடு அருகே புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் 20 என்ற வாலிபரை உறையூர் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை திருச்சி மாநகர போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். இதேபோல் அரசு மருத்துவமனை குமரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகனத்தின் கையில் ஈடுபட்டனர் அப்போது இருசக்கர வாகனத்தில் புகையிலை வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பட்டு முருகன் 35 என்பவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்துரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ புகையிலை பொருட்கள் அதை விற்க பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனம் ரூபாய்ஐந்தாயிரம் பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் கைது
திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து போலீசார் அங்கு ரோந்து சென்று போதை மாத்திரை விற்ற உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் 30 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ஒரு ஊசி மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது இதே போல் பாலக்கரை அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை குட்செட் சாலையைச் சேர்ந்த ஆரிப்கான் 23 மற்றும் காட்வின் பிரபாகரன் 24 ஆகிய இரண்டு வாலிபர்களை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து 16 போதை மாத்திரை ஒரு ஊசி மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி உறையூர் வாத்துக்காரர் தெரு அருகே போதை மாத்திரை விற்ற பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்த முகமது சைப் 26 என்ற சரித்திர பதிவேடு ரவுடியை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் 3 ஊசிகள் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தில்லை நகர் அருகே கடந்த நவம்பர் மாதம் போதை மாத்திரை விற்ற சரித்திர பதிவேடு ரவுடியான தென்னூர் சத்யா நகரை சேர்ந்த குருமூர்த்தி 25 என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து ஐந்து போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் பதிவுகள் செய்யப்பட்டது.

