Skip to content

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு ஊதுவத்தி இயந்திரத்தில் மாவு எடுக்கும்போது கை விரல்கள் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் இரண்டு கை விரல் துண்டாகியுள்ளது. இதனை தொடர்ந்து நிர்வாகத்தின் சார்பில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கை விரல்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய பல லட்சம் செலவாகும் என கை விரல்களை வெட்டி எடுக்க ஊதுவத்தி தொழிற்சாலை நிர்வாகம்

சொல்லியதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அ உரிய பாதுகாப்பு இல்லாமல் அவரை தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பிரியாவை வழக்கை திரும்ப பெற வேண்டும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை முன்பு உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட பெண் பிரியா பட்டியலிடத்தைச் சார்ந்தவர் என்பதால் தொழிற்சாலை மற்றும் உதவி ஆய்வாளர் மிரட்டல் விடுப்பதாகவும் உறவினர்கள் கம்பெனியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

error: Content is protected !!