கரூர் மாவட்டத்தில் 34-வது புதிய காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட 34- வந்து புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று ஜோஸ் தங்கைய்யா பவியேற்றார். முன்னதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி., ஜோஸ் தங்கையாவிற்கு ஆயுதப்படை காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
கரூரில் புதிய எஸ்பியாக ஜோஸ் தங்கைய்யா பொறுப்பேற்பு
- by Authour
