நீதிமன்ற காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த, இரண்டு நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்பரைக் கூட்டத்தில் விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு புலனாய் குழு மாற்றப்பட்டதால் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஐந்து நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், மதியழகனிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐந்து நாட்களுக்கு போலீஸ் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு தமிழக வெற்றிக் கழக வழக்குரைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக மதியழகனை குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மதியழகனுக்கு, சிறப்பு புலனாய்வு குழு ஐந்து நாள் கஸ்டடி கேட்டு இருந்த நிலையில் இரண்டு நாள் கஸ்டடி கொடுத்து நீதிபதி உத்தரவு.

