மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம்.பியாக பதவியேற்கிறார். இதையொட்டி இன்று அவர் தனது நீண்ட கால நண்பரான ரஜினியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். தனக்கு வழங்கப்பட்ட எம்.விக்கான ஆணையை ரஜினியிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக கமல், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்” எனப் பதிவிட்டு, படங்களையும் பதிவிட்டுள்ளார்.