Skip to content

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் ஹேமி மித்ரா (15), மெளனா ஷெரின் (11).  10மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள்.
இவர்கள் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு கேரளாவில் இருந்து காரில் அரச்சலூர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த புளியமரத்தில் மோதியது.

 சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமி மித்ரா ஆகிய 3 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 வயது ஷெரின், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

error: Content is protected !!