Skip to content

கார்த்தி நடிக்கும் புதிய படம்.. டைரக்டர் யார் தெரியுமா ?

நடிகர் கார்த்தி  பருத்தி வீரன்,  ஆயிரத்தில் ஒருவன் , மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் “வந்தியத்தேவன்” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது .மேலும் அந்த படம் நல்ல வசூலை அள்ளியது .அரவிந்த சாமியுடன் கார்த்தி நடித்த  அந்த படத்திற்கு பின் அவர் வா வாத்தியார் என்று படத்தில் நடித்து வருகிறார் .அடுத்து சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார் .இந்த படத்தை பி .எஸ் .மித்ரன் இயக்கி வருகிறார்  இதற்கிடையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில், கார்த்தி 29 படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை நாளை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக உள்ளது.

error: Content is protected !!