கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளப்பட்டியில் நினைவஞ்சலி மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு நகர மன்ற தலைவரும், சிறுபான்மை நிலப்பிரிவு மாநில துணைச்
செயலாளருமான முனைவர் ஜான் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ஷேக் அப்துல் காதர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கினர் இதில் பள்ளப்பட்டி நகர திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.