தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த நான்கு அதிகாரிகளும், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் 2 அலுவலர்கள் என 6 பேர் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வரும் பணியில் சிபிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

