Skip to content

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..

கரூரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

விளையாட்டுத்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான உபகரணங்கள் தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மாவட்டம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு துறையில் பங்கேற்று வரும் மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணாக்கர்களுக்கு கிரிக்கெட் மட்டை, ஸ்டெம்ப், டீ சர்ட், கிரிக்கெட் பந்து, வாலிபால் விளையாடுவதற்கான பந்து, கேரம் போர்டு உள்ளிட்ட 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வாழ்த்து தெரிவித்தார்.

விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!