கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா. இவர் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலம் 98 மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பவித்ராவின் தந்தை கணேசன் கூலித் தொழிலாளி. தாயார் சித்ரா.