கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் பகுதியில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குஞ்சுகள் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
குஞ்சுகள் விழுந்ததால் மயிலும் கீழே குதித்தது. குஞ்சுகளுடன் மயில் தவித்ததை பார்த்த அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படி சம்பவ இடம் சென்ற கரூர் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மயில் மற்றும் அதன் குஞ்சுகளை பத்திரமாக உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.